நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

vanamamalai thanga ther utsav

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில், பங்குனித் திருவிழாவையொட்டி, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனித் தேர்த்திருவிழா, கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் பெருமாள் மற்றும் திருவரமங்கை தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை வழிபாடு நடைபெற்றது. பெருமாள் தாயாருடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளித்தார்.

பத்தாம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தாயார் மற்றும் பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருவரமங்கை தாயாருடன் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தேர் இழுத்தனர்.

கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் தேர் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் மண்டபத்தில் தாயாருக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply