682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 104 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள் இரவு பால் குடம் எடுத்தல், அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடைபெற்றது. தைபூச நாளில் காலை அபிஷேக பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மூலவர் பழநி ஆண்டவர்.
மாலை திருக்கோயில் திடலில் சென்னிவீரம்பாளையம் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்பட்டது.வள்ளி தெய்வானை சமதே முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி காட்சியளித்தார்.
இந்த திருத்தேர் பெருவிழாவில் சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் சா.ஞானசேகரன், துணைத் தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்கள், படியனூர், சின்ன படியனூர், வடவள்ளி, சென்னிவீரம் பாளையம், சிக்காரம்பாளையம், கள்ளிபாளையம், கரிச்சிப்பாளையம், சின்னக்காரனூர், கன்னார்பாளையம், காளட்டியூர், வெள்ளிக்குப்பம் பாளையம் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தி: சரண், காரமடை