நம்ம ஊரு சுற்றுலா: பெரியபாளையம் பவானி அம்மன்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

periyapalayam bavani amman temple

பெரியபாளையம் பவானி அம்மன் (தொடர்ச்சி)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

வாசுதேவரால் கண்ணன் என்ற குழந்தை இரவோடு இரவாக ஆயர்பாடிக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது பெரும் மழைக்கும் பேரிடிக்குமிடையே ஆதிசேசன் படம் எடுத்துக் குடைபிடிக்க, கங்கையாறு விலகி வழி விட கிருஷ்ணன் என்ற குழந்தை யசோதை இல்லத்தில் விடப்பட்டு அங்குள்ள மாயை என்னும் குழந்தையைப் பரமாத்மாவின் அசரீரி சொற்படி தேவகியிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.

          தனது வாக்குறுதியை காப்பாற்ற வாசுதேவர் எட்டாவது குழந்தை பிறந்ததை பற்றி கம்சருக்கு தகவல் கொடுத்தார். அதைக்கேட்ட கம்சன் சினங்கொண்டு சுடுசொல் பேசி என்னைக் கொல்லத் தோன்றிய அற்ப சிசுவே உன்னை கண்ட துண்டமாக்கி மீள்வேன் என்று கூறி, சிறைச்சாலைக்குச் சென்று, தேவகி கையிடத்து வைத்துள்ள குழந்தையைப் பறித்தான்.

பெண் சிசுவாக இருந்ததைக் கண்டு ஆண்மையற்ற ஒரு சிசு என்னைக் கொல்வதா? அதனை நான் விட்டு வைப்பதா? என்று அங்கம் முழுவதும் பொங்கும் சினத்தால் அச்சிசுவை ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதவிட முற்பட்டான். அப்பொது அந்த மாயை வான் வழியிருந்து கம்சனை நோக்கி “பாவத்தின் திருவுருவே உன்னைக் கொல்ல உதித்தவன் என்னை ஒத்த பேராற்றல் மிக்கவன். அவன் நந்தகோபன் மனையில் வளர்ந்து வருகிறான். உன்னையும் உன்னால் உருவாகும் தீமை அனைத்தையும், நீ செய்யும் தவறுகள் பலவற்றையும் அவன் அழித்தே தீருவான்” என வான்வழி நின்று கூறி ஆன பல்லுயிரும் காக்க, அவ்விடம் விட்டு அகன்று இங்கு, பெரியபாளையம் வந்து அமர்ந்தவளே அன்னை பவானி. எனவே கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் இவளே. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.

சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம்.

          நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்தப் புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதிலிருந்து ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

          இத்திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம்.

          மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

          அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர் ஆகியோரின் சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து, பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

Leave a Reply