500 ஆண்டுகள் கனவு பலித்தது; காத்திருப்பின் பலனாக கண் திறந்த அயோத்தி பாலராமர்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

bala ramar prathishtai

சிரித்த முகத்துடன் கண் திறந்தார் பால ராமர்.

இது 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்கு கோடிக்கணக்கான மக்களின் காத்திருப்பின் பயனாக அவர்களின் கனவு இன்று நனவாகியுள்ளது. எண்ணற்ற கர சேவகர்கள், ராமபக்தர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து பெறப்பட்டுள்ள ராமபிரானின் அயோத்தி ஆலயம் இன்று கம்ப்பீரமாக எழுந்து நின்றது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் நடைபெற்றது.
சிரித்த முகத்துடன் கண் திறந்த பால ராமரை, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் மோடி.

ஐந்து நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.

அயோத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட பூக்கள்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டையின் போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் மீது மலர் தூவப்பட்டது.

இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது.

ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறக்கப்பட்ட இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது.

கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.

1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.

ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளிபோன்று இன்று கொண்டாடுகிறது.

ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ாளை முதல் மக்களுக்கு அனுமதி: தரிசன நேரம் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாளை முதல் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலை இன்று நண்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டது. 

இந்த நிலையில், அயோத்தி கோயிலில் உள்ள ராமரை நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7 மணிவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படும் சிறப்புப் பூஜையை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/  என்ற இணையதளத்தில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்ட சில நாள்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் பட்சத்தில் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply