ராமர் கோயில் பத்தி வீடியோ போடுங்க… பக்தியை வெளிப்படுத்துங்க!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ayodhya pranapathishta

அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பிராணப்ரதிஷ்டை (கும்பாபிஷேகம்) குறித்த பக்தர்களின் எண்ணங்களை சின்னச் சின்ன வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்துமாறு உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று ராமரின் குழந்தை வடிவிலான விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி கும்பாபிஷேகத்தில் அமர்ந்து, ஜன.22ல் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, பக்தர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:

ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமர் தனது உரிமையான வசிப்பிடத்திற்குத் திரும்புவது பிரபஞ்சத்தை இணையற்ற உணர்ச்சிகளால் நிரப்புகிறது. அவரது வரவேற்பின் மகத்துவத்தை அதிகரிக்க, உலகெங்கிலும் உள்ள அனைத்து ராமபக்தர்களும் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் #ShriRamHomecoming என்ற ஹேஸ்டேக் உடன் தங்களது முழுப்பெயர், இருப்பிடம் மற்றும் தங்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புடன் சுருக்கமாகக் குறிப்பிட்டு பதிவேற்றலாம்.

Leave a Reply