இன்று ஹனுமத் ஜயந்தி: ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

hanumat jayanthi

அனுமன் ஜயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் களைகட்டின. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று ஹனுமத் தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் மார்கழி மாதம் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர நாளில் ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, இன்று புகழ்பெற்ற அனுமன் தலங்களில் ஆஞ்சநேயருக்கு ஜன்ம தினமாகக் கொண்டாடி, சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில். இங்கே ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஹனுமத் தரிசனம் செய்து வருகின்றனர்.

காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைப் போல், புகழ்பெற்ற தலமான நாகர்கோவில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடைமாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply