அருப்புக்கோட்டை: 17 ஆண்டுகளுக்குப் பின் கார்த்திகை தெப்ப உத்ஸவம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

aruppukkottai theppotsav

அருப்புக்கோட்டையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமுதலிங்கேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தெப்ப தேர் உற்சவம்.

அருப்புக்கோட்டையில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுதவல்லி அம்மன் சமேத அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில் தெப்பத்தேர் உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
யாகசாலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கிய இந்த விழாவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலமாக வேடிக்கையுடன் திருகயிலாய வாத்தியங்கள் முழங்க, மத நல்லிணக்கத்தோடு இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.

மாட்டு வண்டியில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவ மூர்த்திகளாக வீதி உலாவாக தெப்பக்குளத்தை சென்றடைந்தனர். அங்கு தெப்பக்குளத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளி மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தெப்ப தேர் உற்சவ விழாவை முன்னிட்டு தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. தெப்ப தேரில் உற்சவமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.17 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவ விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply