திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்த்திகை தீபம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

thirupparankundram deepam vizha

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்திகை தீபம் ஏற்றப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைமீது திருக்கார்த்திகை முன்னிட்டு, தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என,கோசமிட்டு தீபத்தை ஏற்றினர். தீபத் திருவிழா முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது கொப்பரைகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிபிள்ளையார் கோயில் மேல் உள்ள மோட்ச மண்டபத்தூணில் ஐந்துஅரை அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 150 மீட்டர் காடா துணி திரியாக தயார் செய்யப்பட்டு. 500 லிட்டர் நெய்யில் திரிகள் ஊற வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையிலிருந்து வந்த சிவாச்சாரர்களால் கார்த்திகை தீபம் செப்பு கொப்பரையில் ஏற்ற தயார் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடித்தவுடன் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பூஜைகள் முடிந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுட்டனர்.

Leave a Reply