கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புரட்டாசி பிரதோஷம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அருள்மிகு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , அபிஷேகப் பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார், சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, உதிரிப்பூக்களால் அர்ச்சித்து, நாமாவளிகள் கூறினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின் பிரதோஷத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply