
682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், செட்டி தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத புதன்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கணபதி ஹோமத்துடன் தொடங்கி, பின்னர் ஸ்ரீபால ஐயப்ப சுவாமிக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெற்றது. பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்தனம், பன்னீர் விபூதி, சொர்ணம் , 108 வலம்புரி சங்கு, ஆகியவற்றுடன், கலசம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை செய்த பின், கோபுர தீபம் உட்பட, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பகதர்கள் பங்கேற்று, ஸ்ரீபால ஐயப்ப சுவாமியை வணங்கி அருள் பெற்றார்கள்.