கோட்டைமாடன் கோயிலில் சாமகொடை பூஜை!

செய்திகள்
– Advertisement –


Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகோட்டைமாடன், ஸ்ரீ கோட்டை மாடத்தி மற்றும் ஸ்ரீ கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோவிலில் 22 வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 ஆம் தேதி திருக்கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமமும், இதனை தொடர்ந்து பால்குடம் ஊர்வலமும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும்,அலங்கார தீபாராதனையும் நடந்தது.

பின்னர் கோயில் வளாகத்தில் மதியம் அன்னதானமும், மாலையில் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலமும் நடந்தது.

பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி மற்றும் விழாக்கமிட்டியினா். சிறப்பாக செய்திருந்தனர்.Leave a Reply