ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்; ஜூலை 17ல்!

செய்திகள்
– Advertisement –


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணத்துக்கான ஏற்பாடுகள் மதுரை பகுதிகளில் நடந்து வருகிறது. ஆடி மாதம் வரும் ஜூலை 17 திங்கள் கிழமை பிறக்கிறது. ஆடி முதல் நாளே அமாவாசையும் வருகிறது. மேலும் ஆடி மாத இறுதியிலும் ஓர் அமாவாசை திதி வருகிறது. எனவே எந்த நாளில் அமாவாசை முன்னோர் வழிபாடு செய்வது என்பதில் பலருக்கும் ஒரு குழப்பம் இருந்தது.

காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சாஸ்திர பண்டிதர் சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது: இந்தாண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. இதில் முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடித்தால் விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம். இரண்டு அமாவாசையையும் கடைபிடிப்பதும் நல்லது என்றார்.

எனவே, இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை ஒட்டி மதுரை நகரில் உள்ள கோயில்களில், தீர்த்தங்களில் அமாவாசை சிறப்பு தர்ப்பணம் நடைபெறுகிறது. முன்னோர்களுக்கு அமாவாசை மற்றும் மாதப் பிறப்பு என்று தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் செய்வது உகந்தது என்று நமது முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில், வாரிசுகள் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமான செயலாகும். இதைத் தொடர்ந்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கோயில்களில் தீர்த்தங்களில் அமாவாசை தர்ப்பணம் நடைபெறுகிறது.

மதுரை பகுதியில் ஆடி அமாவாசை தர்ப்பணம் நடைபெறும் சில இடங்கள்…

மதுரை, அண்ணாநகர், யானைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், 17.07.23..திங்கள்கிழமை காலை 6.15…7..மணி வரையிலும், காலை 7.15..மணி முதல் 8.15..மணி வரை மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்திலும், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை , மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே வி.ஏ.ஒ. அலுவலகம் முன்புறம் உள்ள அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஆடி அமாவாசை தர்பணம் செய்து வைக்கப்படும்.

தர்ப்பணத்துக்கு வருபவர்கள், கறுப்பு எள், வாழைப்பழம், பூக்கள், விளக்குகள் கொண்டு வரவேண்டும். கோயில் வாசலிலும் கிடைக்கும். தர்ப்பணம் செய்ய தாம்பாளம், டம்ளர் கொண்டு வரவேண்டும்.
பெண்கள், காய்கறிகள், அரிசி தானம் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்



Leave a Reply