– Advertisements –
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 26ந் தேதி வருஷாபிஷேகம் நாளை மாலை “சாக்கியார் கூத்து” ஹாஸ்ய நாடகம் நடக்கிறது
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நாளை மாலை பாரம்பரிய நிகழ்த்துக்கலைகளின் ஒன்றான “சாக்கியார் கூத்து” ஹாஸ்ய நாடகம் நடக்கிறது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானது, நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி, 418 ஆண்டுகளுக்குப்பின்னர் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பினன்ர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஆங்கில மாதத்துக்குப்பதில் தமிழ் மாதமான ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூன்.26.ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
– Advertisements –
நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. 5.30 மனி அளவில் சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது.
தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை கோகுல் தந்திரி நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அலங்கார தீபாராதனையைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் “லட்சதீப விழா” நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.
முன்னதாக நாளை மாலை 3 மணி அளவில் “சாக்கியார் கூத்து” எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்சி நடக்கிறது. இந்நிகழ்வு கேரளாவுடன் குமரி இணைந்திருந்தபோது நடைபெற்றது.
குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தபின்னர் இந்த நிகழ்வு நடப்பது இல்லை. தற்போது பாரம்பரியம் மிக்க இந்தகலையை 67 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சூரைச் சேர்ந்த கலாமண்டலம் சங்கீத் சாக்கியார் இன்று நடத்துகிறார்.
வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.
– Advertisements –