அறந்தாங்கி அருகே முத்து மாரியம்மன் ஆலய வைகாசித் திருவிழா தீமிதி உத்ஸவம்!

செய்திகள்
aranthangi amman temple news

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் குறிச்சி குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.

ஆவுடையார்கோயிலில் பிரசித்தி பெற்ற பழமையான குறிச்சி குளம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது

இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானஆவுடையார் கோயிலை சேர்ந்த திருக்கோயிலாகும்

இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவும், லட்சார்ச்சனை விழாவும், அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் விழாவும், தேரோட்டமும், தெப்பமும் தீமிதி விழாவும் நடத்தப்படுவது வழக்கம்

அதன்படி தீமிதி விழா நடந்தது முன்னதாக கோயிலில் உள்ள மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்துவிரதம் இருந்த பக்தர்கள் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்து அக்கினி காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வெளியே வலம் வந்து குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் முன்பாக நின்று தரிசனம் செய்து அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க தீமிதி விழா நடந்தது

விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24-வது குருமகா சன்னிதானம் அம்பலமான தேசிக பரமாச்சாரியசுவாமிகள் அருளாணைப்படி கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் மாணிக்கம் செய்தார் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் செய்தனர்

Leave a Reply