வாடிப்பட்டி, உசிலை, சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

05861-kumbabhishekams-near-madurai-temples.html">வாடிப்பட்டி, உசிலை, சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலம்! Dhinasari Tamil ரவிச்சந்திரன், மதுரை

#image_title

வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டம் , குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வாடிப்பட்டி வல்லபகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது.

முதல் நாள் காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை செய்து கணபதி, லட்சுமி,நவகிரக , ஹோமங்களுடன் கோ பூஜை செய்து விநாயகர் சதுர்த்திஅன்ன தானம் வழங்கப்பட்டது.மாலை 6 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகபூஜை நடந்தது. இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை செய்யப்பட்டது.

10.45 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, சத்யம் குழுமம் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 11 மணிக்கு மூலவர் மற்றும் கோபுர கலசத்துக்கு காசி, ராமேஸ்வரம், பாபநாசம், அழகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

11.15 மணிக்கு வல்லப கணபதி, தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்ச னைகள் செய்யப்பட்டு அலங் காரம் செய்யப்பட்டது. வல்லப கணபதி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள் பாாலித் தார். இந்த யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திக்பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். 12 மணிக்கு அன்ன தானம் நடந்தது.

இதன் ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ் ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், உதயகுமார், பழனி, உள்பட போலீசார்கள் செய்திருந்தனர்.

உசிலை அருகே ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, நாட்டாமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையில் காவல் தெய்வ கோவிலாக அமைந்துள்ளது. அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அய்யனர் சுவாமிக்கு 51 அடியில் ராஜ கோபுரம், பேச்சியம்மன் மற்றும் சின்னசாமிக்கு 21 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 6 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி
மூன்று கால யாக பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் இன்று கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, அய்யனார் சுவாமி, பேச்சியம்மன் மற்றும் சின்னச் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக விழாவில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் என, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் மற்றும் சாமி தரிசனம் செய்தனர்.

சோழவந்தான் தொட்டிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டு நாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தொட்டிச்சி அம்மன் மற்றும் விநாயகர் சப்பானி கருப்புசாமி ஆகிய கோவில்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, திருவேடகம் கணேச பட்டர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது.

சிம்மக்கல் முத்து ட்ராவல்ஸ் அண்ணன் காளிமுத்து இந்திரா, குடும்பத்திற்கு அன்னதான வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்ய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். திண்டுக்கல் பங்காளிகள் உறவின் முறையாளர்கள் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தார் ஆகியோர் மகா கும்பாபிஷே விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

முடுவார்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உரைமுறைக்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா செப்.6 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், மகா பூர்ணகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

வாடிப்பட்டி, உசிலை, சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலம்! News First Appeared in Dhinasari Tamil

Leave a Reply