அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சோனைபட்டசாமி கோவில் வைகாசி களரி உத்ஸவம்!

செய்திகள்
92" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80.jpg" alt class="wp-image-287884" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-2.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-4.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-5.jpg 150w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80.jpg 696w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-6.jpg 1068w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/06/e0ae85e0aeb2e0ae99e0af8de0ae95e0aebee0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d-e0ae85e0aeb0e0af81e0ae95e0af87-e0aeb8e0af8de0aeb0e0af80-7.jpg 1200w" sizes="(max-width: 696px) 100vw, 696px" data-recalc-dims="1">
alankanallur temple function

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சோனைபட்டசாமி திருக்கோவில் வைகாசி மாத களரி உற்சவ விழா நடைபெற்றது,.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆல்பாடி கருப்புசாமி, ஆண்டிச்சாமி, வீரம்மாள், சோனைபட்டசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் வைகாசி மாத களரி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவானது கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் தொடங்கி சாமியாடி ஊர் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை பட்டசாமி கோவில் புறப்படுதல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், கோவில் வீட்டில் சாமி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து வானவேடிக்கை முழங்க மேளதாளங்களுடன் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூலாத்திகுடுத்தான் 2வது வாரிசு கருப்பு கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply