திருத்தணி முருகன் கோயிலில் விமான குடமுழுக்கு விழா

செய்திகள்

ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படைவீடாக திகழும் முருகன் கோயிலில், ரூ. 25 கோடி செலவில் 92 கிலோ தங்கத்தைக் கொண்டு தங்க விமானம் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றது. ÷இதையடுத்து 3 -ம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், குடமுழுக்கு விழா தொடங்கியது. சனிக்கிழமை 5-ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆசார்யவர்ணம், யாக அலங்காரம் மற்றும் இரவு 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதை திருவள்ளூர் மாவட்ட எம்எல்ஏ இ.ஏ.பி. சிவாஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பிச்சாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை 6-ம் தேதி) இரண்டாம் கால யாகபூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (திங்கள்கிழமை) 7-ம் தேதி காலை 5 மணிக்கு, நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்று காலை 9.30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மலைக்கோயிலில் காலை 10 மணிக்கு, தங்க விமானத்திற்கும் மற்ற கோபுர விமானங்களுக்கும் கலச நீர் ஊற்றி மகா குடமுழுக்குவிழா நடைபெறுகிறது.

பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மு. ஈஸ்வரப்பன், கோயில் இணை ஆணையர் மா. கவிதா மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=372011

Leave a Reply