ரூ.100 கோடியில் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு

செய்திகள்

இது குறித்து இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் க.அன்பழகன் கூறியுள்ளது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.523 கோடி செலவில் 4,724 கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் வாழும் குடியிருப்புகளில் உள்ள 6 ஆயிரம் கோவில்களின் திருப்பணிகளுக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு ரூ.2.7 கோடியில் 10 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

2011-12 நிதியாண்டில் ரூ.100 கோடி செலவில் ஆயிரம் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

சுற்றுலாத் துறை: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.5 கோடி செலவில் பட்டாம்பூச்சி பூங்கா ஏற்படுத்தப்படுகிறது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=372329

Leave a Reply