திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உத்ஸவம் கோலாகலம்!

செய்திகள்
andal thaila utsav - Dhinasari Tamil

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான பகல்பத்து மற்றும் ராப்பத்து நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

மார்கழி மாதத்தின் மிக புண்ணிய நிகழ்ச்சியான, மார்கழி நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமுக்குளத்தில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில், விழா சிறப்பாக நடைபெற்றது. இரவு வாழைக்குளம் தீர்த்தவாரி மண்டபத்தில், ஸ்ரீஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி உற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply