திருச்சேறை சாரநாதபெருமாள் கோயில் தேரோட்டம்

செய்திகள்

வைணவத் தலங்களில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும் ஒரே தலம் என்ற சிறப்புமிக்கது இந்தத் தலம்.  நிகழாண்டில், தைப்பூசத் தேரோட்டத்துக்கான கொடியேற்றம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அருள்மிகு சாரநாயகிதாயார் உடனுறை அருள்மிகு சாரநாதபெருமாள் பஞ்சலட்சுமிகளுடன் சிறப்பு புஷ்பலங்காரத்துடன் கொடிமரம் முன்பு எழுந்தருளியவுடன், சிறப்பு ஆராதனைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, 13 -ம் தேதி முதல் முதல் தினமும் காலையில் பெருமாள் வீதியுலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

ஜன. 17-ம் தேதி  திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான வியாழக்கிழமை (ஜன. 20) காலை 4 மணிக்கு மூலவர் சாரநாதபெருமாளுக்கு தங்கமுலாம் அங்கி சேவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, காலை 4.30 மணிக்கு உத்சவர் சாரநாதபெருமாள் பஞ்சலட்சுமிகளுடன் தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இரவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=365265

Leave a Reply