புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
புதுக்கோட்டைகுமரமலை பாலதண்டாயுதபாணிகோவிலில் கார்த்திகையைகடைசி சோமவாரம் முன்னிட்டு காலையில் சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் திருநீர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது .
பின்னர் ,மாலையில் பாலதண்டாயுதபாணி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது மலை முழுவதும் வண்ணவிளக்கு களால் ஜொலித்து பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவந்து பாலதண்டாயுதபாணியைசாமியை வழிப்பட்டனர்
நிகழ்வில்அறங்காவலர் குழு தலைவர் பா. செந்தில்குமார், செயல் அலுவலர் சா. முத்துராமன், புதுக்கோட்டை உதவி ஆய்வாளர் நாகராஜன், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாலாஜி வைரவமூர்த்தி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர் . இதில் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து வழிபட்டனர் .