கரூரில் ஆடி கடைசி வெள்ளி விளக்கு பூஜை!

செய்திகள்
karur vilakku pooja - Dhinasari Tamil

அருள்மிகு ஸ்ரீ காஞ்சிபெரியவாள் முன்பு உலக நன்மை வேண்டியும், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டும் மாபெரும் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி

கரூர் மாநகரில் அமைந்துள்ள அனுமந்தராயன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர்பஜனை மடத்தில், உலக நன்மை வேண்டியும், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டும், காஞ்சி மகாபெரியவர் முன்பு, காஞ்சி காமாட்சிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு மிகப்பெரிய குத்துவிளக்கு மூலம் திருவிளக்கு பூஜை தொடங்கியது.

karur vilakku pooja1 - Dhinasari Tamil

முன்னதாக பெண்கள் அவரவர் எடுத்து வந்த திருவிளக்குகளுக்கு பூ பொட்டு வைத்தும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்தும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜையில், லலிதா சஹஸ்கர நாம பாராயணத்தினை தொடர்ந்து பெண்கள் பூஜித்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளை அனுஷம் குழுவினர் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி மஹா பெரியவர், ஆதியோகி, காஞ்சி காமாட்சி ஆகிய தெய்வங்களுக்கு விஷேச சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து பாராயணமும் நடத்தப்பட்டது.

Leave a Reply