புதுக்கோட்டை ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு

செய்திகள்
murugan sashti pudukkottai - Dhinasari Tamil

புதுக்கோட்டை ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக் கோயிலில் ஆடிப்பெருக்கு  சஷ்டி   சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

.புதுக்கோட்டைமேல ராஜ  வீதியிலுள்ள அருள்மிகு  ஸ்ரீ தெண்டாயுதபாணி  சுவாமி திருக் கோயிலில் ஆடிபெருக்கு  சஷ்டியை   முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

மாலையில்  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு  மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத் திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை பாலுஅய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர் .அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

  • செய்தி: டீலக்ஸ் சேகர்

Leave a Reply