புதுக்கோட்டையில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு!

செய்திகள்
MURUKAN pdk - Dhinasari Tamil

ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.

அதன்படி புதுக்கோட்டை மேல ராஜவீதி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் ஆடி மாதம் கார்த்திகை, முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி கிருத்திகை யொட்டி, காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷே கம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

MURUKAN - Dhinasari Tamil

பின்னர் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத் திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்

  • சேகர் டீலக்ஸ், புதுக்கோட்டை

Leave a Reply