சபரிமலையில் 20-ம் தேதி நடை அடைப்பு

செய்திகள்

அதன் பின்னர் 12-ம் தேதி தங்க ஆபரணப் பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்படும் நிகழ்ச்சியும், சபரிமலையில்-சுத்திகிரி பூஜை மாலை 6.3 0 மணிக்கும் நடைபெறும்.

ஜனவரி 13-ம் தேதி மதியம் பிம்பசுத்திகிரி பூஜை நிகழ்ச்சி நடைபெறும். 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு தங்க ஆபரண பெட்டி சந்நிதி வந்தடையும்.

தீப ஆராதனை பூஜை நடைபெற்ற பிறகு ஐயப்பன் ஜோதி வடிவில் பொன்னம்பலமேட்டில் காட்சி தருவார்.

வரும் ஜனவரி 16, 17, 18-ம் தேதி படி பூஜை நடைபெறும். 18-ம் தேதியுடன் நெய் அபிஷேக பூஜை முடிவடைகிறது. வரும் 19-ம் தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அதைத்தொடர்ந்து 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தினர் மட்டும் சுவாமியை தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்தவுடன் ஐயப்பன் கோயில்நடை அடைக்கப்படும்.

Leave a Reply