செங்கல்பட்டு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமத் ஜயந்தி

செய்திகள்

ஹனுமந் ஜெயந்தி விழாவையொடடி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உற்சவமூர்த்தி விசேஷ அலங்காரமும், திங்கள்கிழமை உற்சவமூர்த்தி திருவீதி புறப்பாடும், செவ்வாய்க்கிழமை இலட்சார்ச்சனையும், மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் சிறப்பு அலங்காரத்துடன் இரவு 9 மணிக்குமேல் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி தினமும் சென்னை-செங்கல்பட்டு பந்தளராஜா ஐயப்பா சேவா சங்கத்தினர், செங்கல்பட்டு திருபீட குழு, செங்கை ராஜநாராயணன் பஜனைக்குழு  உள்ளிட்டோரின் பஜனை நிகழ்ச்சியும் அன்னதானமும்  நடைபெறுகிறது. செங்கல்பட்டு ஸ்ரீசக்தி சதுர்வேத விற்பன்ன ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பீடம் விழாக் குழுவினரின் சார்பில் டி.ராஜப்பன் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply