பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
e0af8d.jpg" alt="Bharathi theerthar - Dhinasari Tamil" class="wp-image-239568 lazyload ewww_webp_lazy_load" title="பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-1.jpg.webp 1036w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/02/e0aeaae0af87e0aeb0e0aebee0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebee0aeb3e0af8d-1.jpg 1036w">

பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.

இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான் முக்தி. அதாவது, பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுதலை அடைவதே முக்தியாகும். ஞானம்தான் முக்தியடைவதற்கான ஒரே வழியாகும்.

மனிதன் முற்பிறவியில் செய்த கர்மாக்களின் பலனாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறான். ஒவ்வொரு ஜீவனும், நல்லதோ-கெட்டதோ, புண்ணியமோ-பாபமோ கர்மாக்களைச் செய்து கொண்டேதான் இருக்கிறான்.

இது இரண்டையும் செய்யாமல் அவனால் இருக்க முடியாது. ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு பிறவியில் செய்த கர்மம் நிச்சயமாக அவனுக்கு மற்றொரு பிறவியைத் தருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, ஆத்மஞானத்தை அடைவதுதான். அந்த ஞானம் பெற்ற பின்பு அவனுக்கு பிறவி என்பது கிடையாது.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply