பெருமாள் கோயில் இடத்தை விற்பனை செய்ய எதிர்ப்பு

செய்திகள்

கடித விவரம்: இக் கோயிலுக்குச் சொந்தமான உழவர்கரை வருவாய் கிராமத்தில் இருக்கும் இடத்தை புதுச்சேரி வீட்டு வசதி வாரியத்துக்கு சதுரஅடி ரூ. 583 -க்கு விற்பனை செய்ய உத்தேசித்துள்ளதாக அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

இக் கோயிலுக்குப் பயன்படும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இவ்வளவு விலை உயர்ந்த சொத்தை தானமாக அளித்துள்ளனர்.

அவர்கள் எண்ணிய நோக்கத்திலேயே பயன்படுத்த வேண்டுமே தவிர மாறாக பொது அத்தியாவசியமில்லாத காரணத்துக்குக் கொடுப்பதை ஆட்சேபிக்கிறோம். மேலும் வெளிச்சந்தையில் தற்போது அந்த இடத்தில் சதுர அடி ரூ. 2000- வரை விற்பனையாகிறது. ÷இந்நிலையில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உத்தேசித்திருப்பது சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. இது இக் கோயிலுக்கு நேரும் அநியாயமாகக் கருதுகிறோம்.

இக் கோயிலுக்கு கோசாலை, நந்தவனம் அமைத்து கோயிலுக்குத் தேவையான பால் மற்றும் மலர்த் தேவையைப் பூர்த்தி செய்யவோ, கோயில் தேர் நிறுத்தக் கூடம் அமைக்கவோ, வைணவ பஜனைக் கூடம் அமைக்கவோ அந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும்.

இது போன்ற எண்ணம் பக்தர்களுக்கு இருக்கும் நிலையில் இக் கோயிலுக்கு மீதியிருக்கும் கொஞ்சம் இடத்தையும் இது போன்று விற்பது எங்கள் இந்துமத எண்ணத்தை புண்படுத்துவதாகக் கருதுகிறோம்.

எனவே ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்குச் சொந்தமான இடத்தை புதுச்சேரி வீடு கட்டும் சங்கத்துக்கோ அல்லது வேறு யாருக்கோ விற்பனை செய்வதை இக் கோயில் நலன் கருதி கைவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=354957

Leave a Reply