சஞ்சீவராயப் பெருமாள் கோயிலில் ஜன.3-ல் ஹனுமன் ஜெயந்தி விழா

செய்திகள்

இதையொட்டி காலை 10 மணிக்கு சென்னை அஞ்சனி மற்றும் அஸ்வினி சகோதரிகளின் வீணைக்கச்சேரி, மதியம் வடை மாலை சாற்றுதல், மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

மாலை 3 .30 மணிக்கு கிருஷ்ண பக்தி இயக்கத்தாரின் பஜனை, பஞ்ச வாத்திய சேவையுடன் ஹனுமன் ஊர்வலம், மாலை 5 மணிக்கு கம்பன் கண்ட ஹனுமன் என்ற தலைப்பில் திருச்சி கல்யாண ராமனின் பக்திச் சொற்பொழிவு நடக்கிறது.

இதில் நகர்மன்றத் தலைவர் நடேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தர்மலிங்கம், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இதேபோல, கோழிக்கால்நத்தம் சாலையில் உள்ள ஸ்ரீஅனுக்கிரக ஆஞ்சநேயர் கோயிலிலும் ஹனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

Leave a Reply