நாகராஜா கோயில் தைப்பெருந் திருவிழா குழு நிர்வாகிகள் தேர்வு

செய்திகள்

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு, நாகராஜா கோயில் பக்தர்கள் சங்கத் தலைவர் கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். திருக்கோயில் ஸ்ரீகாரியம் இரா. சிவன்பிள்ளை முன்னிலை வகித்தார். ஆர்.வி. சுதாகர் வரவேற்றார்.

கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விழா குழு நிர்வாகிகள்:

தலைவர்- கோ. முத்துக்கருப்பன், துணைத் தலைவர்கள்- பி. மோகன், சி. ராம்மோகன், எல். நீலகண்டன், கே. பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர்- ஆர்.வி. சுதாகர், செயலர்கள்- என்.கே. ராமதாஸ், இ. மதுசூதனன், கே. ராஜன், இணைச் செயலர்கள்- எம். கார்த்திக், எஸ். முத்துக்கருப்பன், ஜி. முத்துகிருஷ்ணன், பொருளாளர்- எம். சுடலையாண்டி, கெüரவத் தலைவர்- எஸ். பாலகணேசன் மற்றும் ஆலோசகர்களும், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜனவரி 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்தவும், 10 நாள்களிலும் சமயச் சொற்பொழிவுகள், சொல்லரங்கம், இயல், இசை, ஆன்மிக அரங்கம், இன்னிசைக் கச்சேரிகள், சிறப்பு நாகஸ்வரம், சிங்காரிமேளம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply