ஜனவரி 11 விமலானந்தர் ஆராதனை விழா

செய்திகள்

சுவாமி சிவானந்தரின் பிரதான சீடர்களில் ஒருவரும், மதுரை சிவானந்த தபோவனம், சென்னை சிவானந்தா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் மதுரை தெய்வநெறிக் கழகத்தின்  முன்னாள் தலைவருமான சுவாமி விமலானந்தரின் 10-வது ஆண்டு ஆராதனை விழா கொண்டாடப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு சுவாமி சிவானந்தரின் ஆங்கில நூல்களில் சுவாமி விமலானந்தரால் தமிழாக்கம் செய்யப்பட்ட தொகுப்புகளிலிருந்து 12 தமிழ் நூல்கள் வெளியிடப்படுகிறது.

நூல்களை குருமகா சன்னிதானம், கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப தேசிக சுவாமிகள் நூல்களை வெளியிட உள்ளனர். மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன என சிவானந்த தபோவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply