
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நடைமுறை பழக்க வழக்கப் படி மூலவர் அருள்மிகு பரம சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய தைல பிரதிஷ்டை செய்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய ஜனவரி 31 முதல் ஜூலை 28 வரை நித்தியப்படி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு மட்டுமே நடைபெறும்.
எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாளை தரிசித்து அருள் பெற வேண்டுமாய் திருக்கோயில் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஜனவரி 31 தை 8ஆம் தேதி தை அமாவாசை அன்று திங்கள்கிழமை பகல் 12 45 க்கு மேல் 1.30க்குள் தைலக்காப்பு சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.