குழந்தை செல்வம் அருளும் பெருமாள்!

செய்திகள்
e0af81e0aeaee0af8d.jpg" alt="Narasimha 1 - Dhinasari Tamil" class="wp-image-238481 lazyload ewww_webp_lazy_load" title="குழந்தை செல்வம் அருளும் பெருமாள்! 1 - Dhinasari Tamil" data-sizes="auto" data-eio-rwidth="899" data-eio-rheight="447" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d.jpg.webp 899w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-3.jpg.webp 768w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d.jpg 899w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88-e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-3.jpg 768w">

மகப்பேறு தரும் கதலி நரசிங்கர் கோவில்….

முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் ஜம்புலிபுத்தூருக்கு, ‘செண்பக வனம்’ என்றும் பெயர் உண்டு பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில் கல் விக்கிரகமாக எம்பெருமான் சுயம்புவாக தரிசனம் கொடுத்து அவதரித்ததால், ‘கதலி நரசிங்கர்’ (கதலி என்றால் வாழை!) என்ற பெயரில் அந்தத் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர்.

அழகிய தெப்பக்குளத்துடன் அழகாக அமைந்திருக்கிறது ஆலயம். ஸ்தல விருட்சம் நாவல் மரம். முகப்பில் பந்தக்கால் மண்டபம். சிற்பங்களுடன் கூடிய சிறிய கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் ஸ்தம்பம் மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கடந்து சென்றால் சிற்ப தூண்களுடன் திகழும் மகா மண்டபம். இங்கு கதலி நரசிங்க பெருமாளை நோக்கி மேற்கு பார்த்த சிறியதும் பெரியதுமாக சிறிய சன்னதியில் இரண்டு கருடாழ்வார்களின் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஒரு கருடாழ்வார் விக்கிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்.

perumal 1 - Dhinasari Tamil

இத்திருத்தலத்தில் மட்டும் இரு கருடாழ்வார்கள் உள்ளனர். இவர்களை வணங்கி இடப்புறம் திரும்பினால் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர். விசேஷ நாட்களில் இவருக்கு வடை மாலை சார்த்தி வழிபடுகிறார்கள்.

பைரவர் வரம் தருவதில் மிகவும் வல்லவர் என்கிறார்கள். அதன் அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில், இருகரம் கூப்பியபடி காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். இவரை மனமார பிரார்த்தித்துச் சென்றால் மகப்பேறு வாய்க்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

அப்படி, தங்களது வேண்டுதல் பலித்தவர்கள் இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். அடுத்து, பெரிய முன்மண்டபம் தாண்டினால் முத்து மண்டபம். இதன் வடக்கு மூலையில், தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சேனை முதல்வர்.

உற்சவ காலங்களில் இவருக்கே முதல் மரியாதை. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜர், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம். முன் வலக்கரம் அபய ஹஸ்தம் காட்ட,முன் இடக்கரத்தை தொடை மீது வைத்து, நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

இவரது திருவடி அருகில், சிறிய சிலை வடிவில் சுயம்புவாக தோன்றிய வாழைப்பூ போன்ற வடிவில் காட்சி தருகிறார் கதலிநரசிங்க பெருமாள். அபிஷேக, நைவேத்திய, தீபாராதனை வேளைகளில் மட்டுமே இவரை தரிசிக்க இயலும்.

மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலிநரசிங்கப் பெருமாள், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் இந்த சந்நிதியில் உள்ளனர்.பெருமாளின் சந்நிதியை ஒட்டி வலப்புறத்தில் லட்சுமி நரசிம்மர் தனிசந்நிதி.

இதையடுத்து கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் செங்கமலத் தாயார் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் கருணை பொங்கக் காட்சியளிக்கிறார். தாயாரின் சந்நிதிக்கு எதிரே நான்கு தூண்களுடன் திகழும் மண்டபத்துக்கு திருமண் காப்பு மண்டபம் என்று பெயர்.

திருவிழாவின்போது உற்சவம் முடிந்து ஆலயம் திரும்பியதும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இளைப்பாறுவார் கதலி நரசிங்கப் பெருமாள். அப்போது, வெண்சாமர உபசாரத்துடன் இவருக்கு தீபாராதனை காட்டி, அதையே தாயாருக்கும் காட்டுவார்கள். இது, இந்த ஆலயத்தின் விசேஷமாகக் கருதப்படுகிறது.

இந்தக் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. நடை திறப்பு காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் திறந்திருக்கும். சனிகிழமை மட்டும் மதியம் 1 மணி வரையும் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் அமைந்திருக்கிறது இந்த கதலி நரசிங்கர் (நரசிம்மர்) ஆலயம்.

Leave a Reply