அவதார நோக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
60" height="292" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe.jpg" alt class="wp-image-236549 lazyload ewww_webp_lazy_load" data-sizes="auto" data-eio-rwidth="360" data-eio-rheight="292" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe.jpg.webp 360w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe-1.jpg.webp 300w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe.jpg 360w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0aeb5e0aea4e0aebee0aeb0-e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aeaee0af8d-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0e0af8de0aeafe0aebe-1.jpg 300w">

– Advertisement –

– Advertisement –

பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.

பகவான் நமக்கு, மற்றவர் துன்புறும்போது அதனைத் தீர்க்கக் கூடிய சக்தியைக் கொடுத்திருக்கிறார். நாம் அந்தச் சக்தியை நமக்கு ‘தயை’ அல்லது கருணை இருந்தால்தான் உபயோகப்படுத்துவோம்.

தயை என்றால் என்ன? மற்றவர் துன்பப்படும்போது அதை நீக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் அதுவே தயை. வேறு விதமாக இருந்தால் அவனை ‘தயையில்லாதவன்’ என்று சொல்வர்.

மனிதனுடைய சிறந்த பண்பு தயை, அப்படிப்பட்ட தயையாகிய கருணையை நம்மிடத்தே அதிகப் படுத்த வேண்டும். சிலருக்கு இயற்கையாகவே விசேஷமாகக் கருணை இருக்கும்.

சில பேருக்கு நல்ல மனிதர்களுடைய ஸஹவாசத்தினால் அவர்களைப் போல் தாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானால் தயை உண்டாகும். அதனால் நாம் தயையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

– Advertisement –

Leave a Reply