ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

செய்திகள்

ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்.முக்கிய நபர்கள் தரிசனம் தவிர மற்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டன்று அதிகாலை 2.3 0 மணிக்கு முக்கிய நபர்கள் தரிசனம் தொடங்கும்.

அதனைத் தொடர்ந்து காலை 4 மணிக்கு சர்வ தரிசனமும்,6 மணிக்கு ரூ.300 செலுத்தி செல்லும் சிறப்பு நுழைவு தரிசனமும் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் கை குழந்தைகள் கொண்டு வருபவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,முதியவர்கள் ஆகியோருக்கு சிறப்பு தரிசனம் கிடையாது.

பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply