ஆத்மதத்துவம் ஒருவன் பெற வேண்டுமென்றால் அவன் பரிசுத்தமான புத்தியுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
காமம் (ஆசை), க்ரோதம் (கோபம்) போன்ற ஆறு எதிரிகள் இல்லாத மனம் தான் மிகவும் பரிசுத்தமான மனமாகும்.
அந்த ஆறு எதிரிகளையும் நம்மிடத்தே இல்லாமல் செய்து கொண்டால்தான் புத்தியைப் பரிசுத்தமாக்க முடியும். புத்தி பரிசுத்தம் இல்லாத ஒருவனுக்கு காமமும், குரோதமும்தான் சக்திகளாக விளங்குமே தவிர வேறு எந்த சக்தியும் இல்லை.
காமத்திலிருந்தும், கோபத்திலிருந்தும் விலகுவதற்கான சாமர்த்தியம் நமக்கு வரவேண்டுமென்றால் நாம் கர்மானுஷ்டானங்களை நடத்துவதில் சிரத்தையுடைவர்களாய் இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் ஆசையிலிருந்தும் கோபத்திலிருந்தும் நாம் விலக முடியும்.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்
ஆத்ம தத்துவம்: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari