திருப்பதியில் ஆச்சரியம்! ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!

செய்திகள்

ஆச்சரியமாக̷ 0; திருப்பதி திருமலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காலியாக உள்ளது. வந்தவர்கள் வந்தபடியே போய் தரிசனம் செய்து கொள்கிறார்கள். ஒரே ஒரு கம்பார்ட்மெண்டில் மட்டுமே பக்தர்கள். எங்கும் நில்லாமல் கோவிலுக்குள் சென்று தரிசனம். அதுவும் ஒன்றரை மணி நேரத்திற்குள் தரிசித்து திரும்பி வந்துவிடலாம்.

கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும் இந்த வார்த்தைகள் மெய்தான். பல நாட்களுக்குப் பிறகு திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காலியாக இருந்தது.

நேற்று பதன் காலை ஏழுமலை மீது பக்தர்களின் கூட்டம் மிக மிகக் குறைந்து காணப்பட்டது. காலை 6 மணிக்கு ஒரே ஒரு கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு பெருமாள் தரிசனம் ஆனவுடன் விஐபி பிரேக்கின் பிறகு தரிசனத்திற்கு வந்தவர்கள் எங்கும் இல்லாமல் நேராக சென்று தரிசித்துக் கொண்டு திரும்பினார்கள் .

சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் என்று அனைத்துமே ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். புதன்கிழமை திருமலை பாலாஜியை தரிசித்தவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 65.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை திருப்பதியில் பெருமாள் தரிசனத்துக்கு ஆந்திர மக்கள் வரமாட்டார்கள். அதனால் வார செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் சற்று குறைந்தே காணப்படும். இந்நிலையில் அடுத்த நாளும் பக்தர் கூட்டம் குறைந்து, தரிசனத்துக்கு வந்தவர்கள் விரைந்து தரிசித்து முடித்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply