ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

செய்திகள்
avudaiyarkoil thiruvadhirai therottam1 - 1

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமிகோயில் உள்ளது இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானத்தின் அருளாணைப்படி கட்டளை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் முன்னிலையில் மண்டகப்படிதாரர்கள் முன்னிலையில் உரிய முறைப்படி பூஜை செய்து தேரோட்டம் நடந்தது
விழாவில் ஈரோடு தேர்திருப்பணிக்குழுவினர் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி ராஜநாயகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

avudaiyarkoil thiruvadhirai therottam2 - 2

ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் செய்தனர் அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு பாலசுப்ரமணியன் ஆத்மநாதன் ஆத்மகிருஸ்ணன் நம்பியாரும் மாணிக்கவாசகருக்கு மாணிக்கம் தியாகராஜகுருக்களும் செய்தனர் திருமுறைகளை பாலாஜி ஒதுவார் பாடினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஸ்குமார் தலைமையில்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் செய்தனர்.

Leave a Reply