வரம் அருளும் வராக மூர்த்தி!

செய்திகள்
55" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeb5e0aeb0e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-e0aeb5e0aeb0e0aebee0ae95-e0aeaee0af82e0aeb0e0af8de0aea4e0af8d.jpg" alt="varagamurthi - 1" class="wp-image-232544" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeb5e0aeb0e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-e0aeb5e0aeb0e0aebee0ae95-e0aeaee0af82e0aeb0e0af8de0aea4e0af8d.jpg 469w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeb5e0aeb0e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-e0aeb5e0aeb0e0aebee0ae95-e0aeaee0af82e0aeb0e0af8de0aea4e0af8d-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeb5e0aeb0e0aeaee0af8d-e0ae85e0aeb0e0af81e0aeb3e0af81e0aeaee0af8d-e0aeb5e0aeb0e0aebee0ae95-e0aeaee0af82e0aeb0e0af8de0aea4e0af8d-4.jpg 150w" sizes="(max-width: 469px) 100vw, 469px" title="வரம் அருளும் வராக மூர்த்தி! 1" data-recalc-dims="1">

சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.

தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார்.

அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.

தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.

‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார்.

காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார்.

உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம்.

nithyakalyanapuri - 2

இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி.

வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார்.

முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.

திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.

இந்த திருத்தலம் – சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.

Leave a Reply