திருமலையில் சொர்க்க வாசல் திறப்பு: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

செய்திகள்

அதன்படி திருமலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வியாழக்கிழமை முதலே பக்தர்கள் குவிந்தனர்.குறிப்பாக திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் 3.30 மணிக்கு முக்கிய நபர்கள் தரிசனம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. 4.30 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்கியது, இதனையடுத்து காலை 9 மணிக்கு மலையப்ப சுவாமி வைகுண்ட வாசல் வழியாக வந்து கோயிலின் எதிரே வாகன மண்டபம் வந்தடைந்து, தங்க ரதத்தில் கோயிலின் மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நடைபாதை வழியாக வந்தவர்களும், சிறப்பு நுழைவு தரிசனத்திலிருந்து வந்த பக்தர்களும் தொடர்ந்து சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களும் வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் சுமார் 5 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Leave a Reply