காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் தங்கத் தகடு பதிக்கும் திருப்பணி தொடங்கியது

செய்திகள்

இந் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கோ.பக்கிரிசாமி பங்கேற்றார். ஆலய செயல் அலுவலர்கள் தியாகராஜன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. அச் சன்னதி விமானத்தில் தங்கத் தகடு போர்த்தும் தொடக்க விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்கள் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இணை ஆணையர் பக்கிரிசாமி நிருபர்களிடம் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2011-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இக் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

8;SectionName=Edition-Chennai&artid=334009&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=">https://www.dinamani.com/edition/story.aspx?artid=334009

Leave a Reply