682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

கோதண்டராமர் திருக்கோயிலில் ராதாகல்யாண பஜனை உத்ஸவம்!
அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் கண்ணன் ராதா கல்யாணம் முன்னிட்டு பஜனை உற்சவம்!
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில்
கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று மாலை முதல் பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தர்கள் பக்தி வெள்ளப் மிதந்தன பஜனை பாடல்களை கடையநல்லூர் பிரம்ம ஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடி பக்தர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து மறுநாள் காலை ஏழு மணி முதல் ராதா கல்யாணத்திற்கான பூஜைகள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு காலை பதினோரு மணி அளவில் கண்ணன் ராதா திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, திருக்கல்யாணத்தை நேரில் காணும் வாய்ப்பினை வருடா வருடம் ஏற்படுத்தி வரும் மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியினரும் மற்றும் ஸ்ரீ ராம பக்தை சபா சார்பாகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.