குரு தட்சிணாமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா

செய்திகள்

காஞ்சிபுரம், அக். 21: காஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.கோயில் பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமாகும். இப்போது புனரமைக்கப்பட்டு இதன் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கிராம தேவதை அழைப்புடன் தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெற்ற தொடர் பூஜைகள் மற்றும் வேள்விகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினர். இவ் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
21230">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=321230

Leave a Reply