e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea4e0af8d-1.jpg 1200w">விருந்து வாரம்
செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர் செய்யொணா துண்ணொ ணாது; திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும் செவ்வாய் விருந்த ருந்தார்; பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப் பொன்னவற் கதிக பகைஆம்; புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போனவுற வுந்தி ரும்பும்; மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும் மனமொத் திருந்த இடமே வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ வாய்த்தநாள் என்ற றியலாம்; அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே! அண்ணலே! அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
அகங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுவையுடையவனே!, பெரியோனே!, அருமை தேவனே!, ஞாயிற்றுக்கிழமையில் ஒருவர் விருந்துசெய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும், திங்கட் கிழமையில் (விருந்துண்டால்) உறவு வரும்; வேறு நன்மையும் உண்டாகும், செவ்வாய்க்கிழமையில் விருந்துண்ணமாட்டார், (உண்டாற்) பகையுண்டாகும், நலம்மிகு புதன்கிழமையில் நலமுண்டாகும், உறவும் உண்டாகும், வியாழனில் விருந்துஉண்டால் மிகு பகைவரும், வெள்ளிக்கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர், முகில் அனைய சனிக்கிழமை நலம் உண்டாகும், மேலும் இந்த நாளே உளம் ஒத்தும் உள்ள இடத்தில் வழக்கமாகச்சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என உணரலாம்.
விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன்
தகாதவை; மற்றவை நலமானவை.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related