முகத்துக்கு நேரே விருந்து

கட்டுரைகள்

கயிலைக்கண்ணன் வெங்கட்ராமன்

நம் நண்பர் ஒருவர் மற்றொரு நண்பர் விரும்பி அழைத்ததன் பேரில் அவர் இல்லத்து விருந்துக்குப் போயிருந்தார்

நம் நண்பர் விருந்து சாப்பிட்டு முடிந்தவுடன் அவரது நண்பரான விருந்திட்டவர்

ஸ்வாமி தளிகை எப்படியிருந்தது என கேட்க

விருந்துண்ட நம் நண்பர் இப்படி பதிலுரைத்தாராம்

கண்ணமுது கோயில்
கறியமுது விண்ணகர்
அந்நமுது வில்லிபுத்தூர் ஆனதே
எண்ணும் சாற்றமுது மல்லை
குழம்பமது குருகூர்
பருப்பதனில் திருமலையே பார் என

விருந்திட்டவர் மகிழ்ந்து போய் ஆஹா நம் விருந்து திவ்யதேசங்களுக்கு ஒப்பாக இருந்துள்ளதே என பெருமைபட்டு கொண்டு அவருக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பினாராம்

நண்பர் இதை நம்மிடம் கூறி ஸ்வாமி நமக்கு விருந்திட்டார்க்கு நம் பதில் புரிந்ததா என தெரியவில்லை உமக்கு புரிந்ததா என கேட்க

அடியேன் சிரித்துகொண்டே

திருக்கண்ணமுது( பாயசம்) கோயில் (ஸ்ரீரங்கம் கோவிலில் மண்சட்டியில் செய்வதால் சற்று அடிப்பிடித்தல் உண்டு) அடி பிடித்திருந்ததா

கறியமுது விண்ணகர் அதாவது சமத்காரமாக விண்ணகரில் இருப்பவன் உப்பிலிப்பன் So கறியமுதில் உப்பு இல்லை

அன்னமுது வில்லிப்புத்தூர் அதாவது ஶ்ரீவிலிபுத்தூரில் அன்னம் குழைந்து இருக்குமாம் ஆக குழைந்தன்னம்

சாற்றமுது மல்லை அதாவது கடலருகில் உள்ளது மல்லை சாற்றமுதில் உப்பு அதிகமாம்

குழம்பது குருகூர்

குருகூர் என்றாலே புளியும் ஆழ்வாரும் தானே இங்கே குழம்பில் புளி அதிகமாம்

பருப்பதில் திருமலை அதாவது பருப்பில் கல் ( திருமலை என்றாலே கல் தானே)இருந்தது என்று அர்தம் சரிதானே என கேட்க

அவர் சிரித்துக்கொண்டே ஜெய் ஶ்ரீராம் என்றபடிக்கே சென்றார்
நம்மை அன்போடு அழைத்து விருந்து தருபவர்களை விருந்தில் குறையிருந்தாலும் முகம் நோக அவர்களிடம் விருந்தை பற்றி குறை கூறாமல் அதையும் மறைபொருளாக சொல்வதே அழகு

Email

Leave a Reply