திருவண்ணாமலை ஆலயத்தில் லட்சதீபம்: மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை, மார்ச் 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மகா சிவன்ராத்திரி உருவான இடமாக திருவண்ணாமலையைச் சொல்வர். சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையோடு தொடர்புடையதை உணர்த்தும் வகையில் சிவாலயத்தில் கருவறை பின்புறம் லிங்கோத்பவர் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க... திருவண்ணாமலை ஆலயத்தில் லட்சதீபம்: மகா சிவராத்திரி விழா கோலாகலம்

சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

மேலும் படிக்க... சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

சென்னை, பிப். 26: சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 2-ம் தேதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மேலும் படிக்க... தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

மஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீமனும்!

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டம் குறித்த கதையுடன் கூடிய கட்டுரை. இதன் பின்னணிக் கதை என்ன, சிவாலய ஓட்டம் ஏன் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை…

மேலும் படிக்க... மஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீமனும்!
error: Content is protected !!