e0af8d-e0ae9ae0af88e0aeb5-e0ae86.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 153
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
அவனிதனிலே பிறந்து – பழநி
சைவ ஆச்சாரியார்களும் கல்வெட்டுக்களும்
உத்துங்கசிவர், பதங்கசம்பு, தர்மசம்பு, விச்வேச்வரசம்பு, ஸோமசம்பு முதலானோர் அக்கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் சில சைவ ஆசாரியர்கள். இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டியது யாதெனில் சைவமடங்கள், சைவ ஆசாரிய பரம்பரை ஆகியன அவர்களுடைய பெயர்களுடன் 5ஆம் நூற்றாண்டு தொடங்கி 15ஆம் நூற்றாண்டுவரை மத்தியப் பிரதேசம், கூர்ஜரம் ஆந்திரம், ராடம் எனப்படும் வங்கதேசத்தின் வடபகுதி, பின்பு தமிழகம் ஆகிய பிரதேசங்களில் நன்கு பரவி விரிந்திருந்த செய்தி, கல்வெட்டுக்களில் நுணுக்கமாக விளக்கப்படுவதுபோல் வேறெந்த சமயத்தைச் சேர்ந்த செய்தியும் விளக்கப்படவில்லை.
சில கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர்கள் இக்கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து நமக்கு மிக அரிய தகவல்களைத் தந்துள்ளனர். மேலும் கணக்கற்ற கல்வெட்டுக்கள் நன்கு ஆராயப்பட்டு அவ்வாதாரங்களின் அடிப்படையில் சைவசித்தாந்தத்தின் வரலாறு மிக விரிவாக எழுதப்படவேண்டும். அக்கல்வெட்டுக்களை நோக்கும் போது அக்காலகட்டத்தில் சைவம் (அதில் குறிப்பாகப் பாசுபதம் மற்றும் சைவசித்தாந்தம்) ஆகிய இரு பெரும் பிரிவுகள் நமது பாரததேசத்தின் அனைத்துப் பகுதியிலும் கம்போஜம் (Cambodia), வியட்நாம், ஆகிய கீழ்த்திசை நாடுகளிலும் மன்னர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளமை நமக்குப் புலப்படுகிறது.
சேக்கிழார் பெருமான் 12ஆம் நூற்றாண்டில் கூறியவாறு அக்காலத்தில் “மேன்மைகொள் சைவநீதியே உலகெங்கும் விளங்கியிருந்தது” நன்கு தெளிவாகிறது. அகோரசிவாசாரியார் தம்முடைய முன்னோர்கள் பலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ராடதேசம் என வழங்கப்பட்ட வங்கத்தின் வடபகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்து தில்லை அம்பலவாணரை வழிபடுவதற்காகவே அங்குக் குடியேறியதாகவும், விக்ரமசோழன் முதலிய சோழ மன்னர்களால் வரவேற்கப்பட்டு அம்மன்னர்களுக்கு மந்திரிகளாக விளங்கியதாகவும் கூறுகிறார். இதிலிருந்து சைவசித்தாந்தம் தமிழ்நாட்டில் தான் தோன்றியது, தமிழகத்திற்கு மட்டுமே உரியது என்னும் கூற்றுகள் வரலாற்றுப் பார்வையில் சரியானவை அல்ல என நாம் அறியலாம். அவை பாரதநாட்டின் வரலாறு மற்றும் சமூக நிலையைச் சரிவர அறியாமல் கூறப்படும் செய்திகள் என்று தெளிவாக நாம் அறியலாம். ஆயினும், தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் உண்மையிலேயே பெருமை யாதெனில், 12-13 நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரதநாட்டின் மற்ற பகுதிகளில் அன்னியப் படையெடுப்பால் வழக்கொழிந்த சைவசித்தாந்தம் மிகப் பழங்காலத்திலிருந்து நாயன்மார்களால் வளர்க்கப்பட்ட சைவப்பயிர் தளைத்த தமிழகத்தில் நன்கு வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. அதற்குச் சான்றாக சிவஞானபோதம் தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏராளமான சைவசித்தாந்த நூல்கள் இயற்றப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம்.
இவ்வாறு விரிந்து பரந்து விளங்கி வந்த சைவசித்தாந்தம் முகம்மதியர்களின் படையெடுப்பால் பெரும்பான்மை வடஇந்தியாவில் வழக்கொழிந்து தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு வளர்ந்து வந்துகொண்டிருப்பதை நாமெல்லோரும் அறிவோம். மற்றொரு முக்கிய செய்தி யாதெனில், ஸித்தாந்தசேகரம் என்னும் சைவபத்ததி நூலை இயற்றிய விச்வநாதர் தம்முடைய முன்னோர்கள் சாளுக்கிய மன்னர்களால் பெரிதும் போற்றி ஆதரிக்கப்பட்டதாகவும், அவர்களுள் சிலரும் தாமும் வேதங்களை நன்கு கற்று, வ்யூடபௌண்டரீகம் முதலான ச்ரௌதயாகங்களைச் செய்தும், சைவஸித்தாந்த ஆகமங்களில் கூறப்பட்டவாறு தீக்ஷைகளைப் பெற்று காசியில் பதிமூன்றாம், பதிநான்காம் நூற்றாண்டுகளில் ஸ்ரீவிச்வநாதர் ஆலயத்தில் பூஜைகளைச் செய்து வந்ததாகவும் தம் நூலில் குறிப்பிடுகிறார். தம்மை உபயவேதாந்தி என்று கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. மேற்கூறியது சைவசித்தாந்தத்தின் பெருமைமிக்க வரலாற்றின் ஒரு சிறிய கண்ணோட்டம்.
சைவாகமப் பதிப்புகள்
இருபதாம் நூற்றாண்டில் நம்முடைய பழைய ஆகமங்களை பதிப்பித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை பாரதநாட்டில் நூல்கள் பனையோலைகளிலும், பூர்ஜபத்ரமென்னும் மரப்பட்டைகளிலும், துணியிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மயிலை அழகப்பமுதலியார் முதன்முதலில் காமிகம், காரணம் முதலிய சைவாகமங்களை தம்முடைய சிவஞானபோத யந்திரசாலையில் அச்சு இயந்திரத்தில் ஏற்றிப் புத்தகவடிவில் அச்சிட்டு வெளிக் கொணர்ந்தார். காமிகாகமம் முழுவதையும் தமிழில் பதவுரை, பொழிப்புரையுடன் அச்சிட்டு வெளியிட்டார்.
பின்னர் ஷண்முகசுந்தரமுதலியார் ஸுப்ரபேதம், வாதுலசுத்தாக்கியம், குமாரதந்த்ரம், ஸித்தாந்தஸாராவளியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் முதன்முதலில் அச்சிட்டார். இவை யாவும் கிரந்தலிபியில் அச்சானவை. தேவகோட்டை சிவாகமபரிபாலனசங்கத்தின் பதிப்பாகக் கிரணாகமம் கிரந்தலிபியில் வெளியானது. க்ரியாகாண்டக்ரமாவளி எனப்படும் ஸோமசம்புபத்ததி, (தேவநாகரி லிபியிலும், தமிழ் மொழிபெயர்ப்புடனும்), பரார்த்தாலய நித்தியபூஜாவிதி முதலிய நூல்களும் இச்சங்கத்தின் மூலம் அச்சேறின.
பின்னர் சில ஆண்டுகளில் தமிழ்நாடு அர்ச்சகர் சங்கம் காமிகாகமம் பூர்வபாகம் உத்தரபாகம் இரண்டையும் தேவநாகரி லிபியில் தனித்தனியே அச்சிட்டது; அப்பதிப்பிற்கு ஆதாரமான சுவடிகளைப் பற்றிய குறிப்போ பாடபேதங்களோ அதில் காணப்படவில்லை.
திருப்புகழ் கதைகள்: சைவ ஆச்சாரியார்களும் கல்வெட்டுக்களும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.