e0af8d-e0ae85.jpg" style="display: block; margin: 1em auto">
பரோபகாரத்திற்கு ஈடான தர்மம் வேறெதுவும் இல்லை என்று நம் வாழ்க்கையிலும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.
அதேபோல், மற்றவர்களின் துன்பங்களைப் போக்குவதில் நாம் ஒரு கருவியாக இருந்தால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம். அதனால்தான் நமது முன்னோர்கள் அதற்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பரோபக்ருதிசூன்யஸ்ய திங்மனுஷ்யஸ்ய ஜீவிதம்
என்று ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மற்றவனுக்கு உதவி செய்யாத மனிதன் ஒருவனின் வாழ்க்கை வீண்! ஏன் இத்தகைய உறுதியோடு இந்த வாக்கியம் சொல்லப்பட்டிருக்கிறது? வாழும் போதும் சரி இறந்த பிறகும் சரி, பிறருக்கு உதவாதவனால் என்னதான் பயன்? பிராணிகளே அத்தகைய மனிதனைக் காட்டிலும் சிறந்தவை.
பரோபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.