e0aebee0aeb2e0af87-e0ae85e0aeb5e0aea9e0af8d-e0aea4e0aebee0aeb3e0af8d-e0aeb5e0aea3e0ae99e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
எவ்வளவோ லெளகிகமான விஷயங்களை நாம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால் அமைதியென்பதே இல்லாமல் நம் மனம் தவித்துக்கொண்டு இருக்கிறது.
அப்படி இருந்துமே திரும்பவும் நமக்கு இந்த லெளகிகமே வேண்டும் என்று சொன்னால், நம்முடைய அடர்ந்த மோஹம் தானே இதற்குக் காரணம். அதை விட்டுவிட்டு பகவானையே நினைக்கக்கூடிய ஒரு பவித்ரமான சந்தர்ப்பம் நமக்கு இருந்தால் அதுதான் நமது வாழ்க்கையிலே புனிதமான நாளாகும்.
“பகவானே! எனக்கு லெளகிகமான விஷயங்களில் இருக்கும் ஆசைகள் போய் உன்னுடைய பாதத்திலேயே என் மனம் நிலைத்து நிற்க நீ எனக்கு அனுக்ரஹம் செய்” என்கிற இந்த ஒரு பிரார்த்தனையை நாம் பகவானுடைய சன்னிதியில் செய்தோமானால் நம்முடைய ஜீவன் தன்யமாகிவிடும்; மிகவும் பவித்ரமாகிவிடும்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி..! ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.