கங்கைக்கரை ஒட்டிய நவதீப்பில் முகிலன், கோவிந்தன் என இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர் அவரில் முகிலன் உண்மையான கிருஷ்ண பக்தர், கோவிந்தன் வெளியே மட்டுமே பக்தராக நடித்தார் குறிப்பாக சாக்கு போக்கு சொல்லி எந்த பக்தி சேவையும் செய்யாமல் தட்டிக்கழித்து வந்தார்
ஒருமுறை கங்கைக் கரை அருகில் உள்ள மாயாப்பூர் என்னுமிடத்தில் ஆன்மீக மகான் ஒருவர் விஜயம் செய்தார். இதனை அறிந்த உண்மையான பக்தர் முகிலன் தனது நண்பரிடம் நண்பரே கங்கையின் மறுகரையில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக மகான் ஒருவர் வந்துள்ளார் நாம் சென்று அவரது ஆசியைப் பெறலாம் என்று கூறி அழைத்தான்
கோவிந்தன் அதற்கு ஆமாம் ஆமாம் மிக நல்லது, கண்டிப்பாக நாம் ஒரு நாள் போவோம் ஆனால் இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து செல்லலாம் இப்போது நிறைய வேலை உள்ளது என்று கூறி தட்டிக் கழித்தார்.
இரண்டு நாட்கள் கடந்தன, கங்கைக் கரையில் களியாட்ட விழா நடந்தது. கோவிந்தன், முகிலனிடம் நாம் இங்கு விழாவை காண செல்வோமா அங்கு சூடான பக்கோடா, சமோசா, பூரி, ஐஸ் என பல உணவுப் பண்டங்கள் கிடைக்கும் என கேட்டார், முகிலனும் உடனே ஒத்துக் கொண்டார்
இருவரும் விழாவிற்கு சென்றார்கள். கோவிந்தன் சில உணவுப் பண்டங்களை சுவைத்தார். அங்கே உள்ள பல காட்சிகளை பார்த்து அற்ப மகிழ்ச்சி அடைந்தார்
இதற்கிடையே முகிலன் கோவிந்தனிடம் இப்போது நாம் கங்கைக் கரையில் தான் இருக்கிறோம், மடம் அருகிலேயே உள்ளது. இதை நல்ல வாய்ப்பாக கொண்டு அந்த சாதுவை சந்திப்போம் என்று கூறினார்.
உடனே கோவிந்தன், நான் கூட போகத்தான் விரும்புகிறேன், ஆனால் ஆறு தான் மிக உயர்ந்து உள்ளது, மழைக்காலமாக உள்ளது, படகில் ஏறினால் சில சமயம் எனக்கு மயக்கம் ஏற்படும், அதனால் நாம் இப்போது போகவேண்டாம், மழைக்காலம் முடிந்து, தண்ணீரெல்லாம் வற்றிய பிறகு ஆறு ஆழம் இல்லாமல் போய் விடும், அப்போது நாம் நடந்தே சென்று விடலாம் என்று கூறினார்.
முகிலன் தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்டார், நண்பரே, நீ உண்மையில் பயங்கரமான ஏமாற்றுக்காரன், எப்போது ஆறு வற்றும் சொல், நாம் கடந்து செல்லும் அளவுக்கு…
உடனே கோவிந்தன், அந்த மகானை சந்திக்க எனக்கு விருப்பமே இல்லை, எனவேதான் ஆறு வற்றிய பிறகு செல்லலாம் என்றேன், கோவிந்தா…
நீ உன்னுடைய ஆன்மிக வாழ்வில் உறுதியுடன் இல்லாததால்தான், நான் உன்னை அழைத்து செல்லவில்லை என கூறினார் முகிலன், புரிந்து கொள்….கங்கை எப்போது வற்ற? நாம் எப்போது அவரைக் காண? என்று கூறி முகிலன் சென்றார்
இதே போல் நிறைய பேர் தங்களுக்கு ஆன்மிக வாழ்விற்கான பொன்னான வாய்ப்பு வரும்போது கூட ஏதாவது சாக்குபோக்கு கூறி நழுவி விடுகிறார்கள்
உண்மையில் ஆன்மீக வாழ்க்கையில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், பிரச்சனைகள் இருந்தாலும் பக்தி சேவையில் ஈடுபடுவார்கள்.
கிடைப்பதற்கு அரிதான மனிதப் பிறவியில் வாழ்வின் உண்மை நோக்கத்தை அறிய தினமும் சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும்
ஆனால் காலம் வரட்டும் அதாவது வயோதிகம் வரட்டும் உடனே ஐக்கியமாய் விடுவோம் என்று கூறி ஆன்மீக விஷயங்களை ஒத்திப் போட்டுக் கொண்டு உண்பது, உறங்குவது, பொருள் ஈட்டுவது, தற்காத்துக் கொள்வது போன்ற விஷயங்களிலேயே தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள்
இந்த செயல்கள் அனைத்தும் தின்ற சக்கையை மீண்டும் மீண்டும் தின்பதற்கு சமம் என்று பாகவதம் கூறுகிறது
நமது ஆயுட்காலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது ஸ்ரீ கிருஷ்ணரின் பக்திக்கு ஒரு வினாடியை கூட அழிக்க கூடாது.
ஏனெனில் நமக்கு தெரியாமல் செலவிடப்பட்ட ஒரு நொடிப்பொழுது கூட நம்மால் திரும்ப பெற முடியாது
தொடரும் பிறவிச்சக்கரத்திலிருந்து விடுபடுவதே வாழ்வின் முடிவான நோக்கமாகும் இதற்காகவே வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் செலவிட வேண்டும்
நேரத்தை எப்படி செலவழிப்பது..? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.